டிஸ்மிஸ் ஆன நட்ராஜ் ஒரே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது எப்படி? முழுவிபரம்

டிஸ்மிஸ் ஆன நட்ராஜ் ஒரே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது எப்படி? முழுவிபரம்

natrajஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் டி.ஜி.பி நடராஜ் மீண்டும் அதிமுக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவரது நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி உள்பட பல உயர்பதவிகளில் இருந்தவர் ஆர்.நடராஜ். சிறைத்துறை, தீயணைப்புத் துறை டி.ஜி.பி.யாக கடைசியாக பணியாற்றிய இவர் கடந்த 2014ஆம் ஆண்டு ஓய்வுக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பத்திரிகையாளர் நடராஜ் அளித்த தொலைபேசி பேட்டி ஒன்று ஒளிபரப்பானது. இந்த பேட்டியில் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீது அவர் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் அப்போது பத்திரிகையாளர் நடராஜ் படத்திற்கு பதிலாக முன்னாள் டி.ஜி.பி நடராஜ் படம் தவறுதலாக அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.  

இதனால் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நடராஜ் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை ஜெயலலிதா நேற்று முன் தினம் அறிவித்தார். இந்நிலையில் தனது தவறை உணர்ந்து அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வருத்தம் தெரிவித்ததை அடுத்து நடராஜன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்து கொள்ளப்பட்டதாகவும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Leave a Reply