கேரள புதிய ஆளுனராக பதவியேற்றார் பி.சதாசிவம். முதல்வர் உம்மன்சாண்டி வாழ்த்து.

sadasivamகேரள ஆளுனராக இருந்த ஷீலா தீட்சித் தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய கவர்னராக முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நியமனம் செய்யப்பட்டார். அவர் இன்று காலை கேரள ஆளுனராக பதவியேற்று கொண்டார்.

இன்று காலை கோவையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்ற நீதிபதி சதாசிவத்துக்கு விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, முதலமைச்சர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள், உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

இந்நிலையில், கேரள ஆளுநராக நீதிபதி சதாசிவம் இன்று பதவி ஏற்று கொண்டார். திருவனந்தபுரத்திலுள்ள ராஜ்பவனில் நடைபெற்ற எளிய விழாவில், புதிய ஆளுநரான சதாசிவத்திற்கு கேரள உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி அசோக் பூஷண் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுனராக பதவியேற்ற சதாசிவத்திற்கு முதல்வர் உம்மன்சாண்டியும் அவரது அமைச்சர்களும் வாழ்த்து கூறினர்.

Leave a Reply