சூடு பிடிக்கின்றது பீகார் தேர்தல். முன்னாள் முதல்வர் இரு தொகுகளில் போட்டி

சூடு பிடிக்கின்றது பீகார் தேர்தல். முன்னாள் முதல்வர் இரு தொகுகளில் போட்டி
maanghi
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 12ஆம் தேதியில் இருந்து நவம்பர் 5ஆம் தேதி வரை ஐந்து கட்டங்களாக நடைபெறவுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு, மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தற்போது அறிவித்துள்ளார்.

ஜெஹனாபாத்தின் மக்தூம் மற்றும் கயாவின் இமாம்கன்ச் ஆகிய இரண்டு தொகுதிகளை மாஞ்சி தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே லாலுபிரசாத் மனைவி ராப்ரி தேவி இவரை போலவே இரு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது பீகார் அரசியலில் இது இரண்டாவது முறை. பீகாரில் மஹா தலித் சமூகத்தின் தலைவராகக் கருதப்படும் மாஞ்சி தோல்விக்கு பயந்தே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் செய்தி தொடர்பாளர் டானிஷ் ரிஜ்வான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வராக இருந்த மாஞ்சி பதவி ஜனநாயகத்திற்கு விரோதமாக பதவி இழக்கக் காரணமாக இருந்தவர் இந்த உதய் நாரயண். இவரை தோற்கடிப்படிப்பது பாஜக தலைவர் அமித்ஷாவின் விருப்பம். எனவே, அவரை எதிர்க்க மாஞ்சி இரண்டாவது தொகுதியாக இமாம்கன்ச்சை தேர்ந்தெடுத்துள்ளார்” என்று கூறினார்.

Leave a Reply