அரசியல்வாதிகள் ஏமாற்று பேர்வழிகள். அவர்களை நம்பாதீர்கள். ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து
குதிரை, நாய் உள்பட மற்ற விலங்குகளை போல பசுவும் ஒரு விலங்குதான். பசுவை மட்டும் தாயாக ஏற்றுக்கொள்ள முடியாது என ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ அவ்வபோது சர்ச்சைக்குரிய கருத்து கூறி வருவது வழக்கமான ஒன்றே. இந்நிலையில் உ.பி. மாநிலத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்ட ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் இன்று கருத்து கூறுகையில், “பசு ஒரு விலங்கு. குதிரை, நாய் போலதான் அதுவும். அதனை எப்படி தாயாக ஏற்க முடியும்? நான் மாட்டிறைச்சி உண்கிறேன். இனிமேலும் உண்பேன். ஆனால் மாட்டிறைச்சி உண்ணும்படி யாரையும் நான் கட்டாயப்படுத்துவதில்லை. உலகம் முழுக்க பரவலாக மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. அவர்கள் எல்லாம் முட்டாள்களா?
ஆனால் அதே நேரத்தில் உ.பி.யில் மாட்டிறைச்சிக்காக ஒருவரை கொலை செய்த சம்பவத்தை வைத்து வாக்கு வங்கி அரசியல் நடத்தப்படுகிறது. அரசியல்வாதிகள் அனைவரும் ஏமாற்றுப் பேர்வழிகள். அவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களை நம்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.