மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ்-க்கு ஆதரவு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மெரீனாவில் அதிமுகவை மீட்க தனியாக போராடுவேன் என்று கூறிய முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அதிகரித்து கொண்டே வருகிறது. மைத்ரேயன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன், உள்பட ஒவ்வொருவராக ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் முதல்வருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி சற்றுமுன் பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சிறை பிடிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இன்று மாலைக்குள் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தர வேண்டும் என்றும் பொன்னுச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார்.