முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமரும், பா.ஜ.க மூத்த தலைவருமான அடல்பிஹாரி வாஜ்பாய், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து உடனடியாக அவர், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இன்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆனாலும் இதுவொரு வழக்கமான உடல் பரிசோதனை என்றும் உடல் பரிசோதனைக்காகவே வாஜ்பாய் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலோரியாவின் மேற்பார்வையில், சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply