கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி மிருகக்காட்சி சாலையில் சிங்கம் இருக்கும் இடத்தில் தவறி விழுந்த ஒரு போதை இளைஞரை சிங்கம் கடித்து தின்றது குறித்த செய்த பெரும் பரபரப்பானது. இதேபோன்ற ஒரு சம்பவம் நேற்று பார்சிலோனாவில் நடந்துள்ளது.
பார்சிலோனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சிங்கங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பள்ளமான ஒரு பகுதியில் நேற்று ராணுவ உடை அணிந்த ஒருவர் தவறி விழுந்துவிட்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான அவர் தன்னை காப்பாற்றும்படி அலறினார். ஆனால் அதற்குள் மூன்றுக்கும் மேற்பட்ட சிங்கங்கள் வந்து அவரது உடலை கடித்து காயப்படுத்தின.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு மேலே இருந்து மிருகக்காட்சி சாலையின் காவலர்கள் தண்ணீரை சிங்கங்கள் மீது பீய்ச்சி அடித்து சிங்கங்களை விரட்டினார்கள். அதன்பின்னர் படுகாயம் அடைந்த அந்த நபரை காவலாளிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய பெயர் ஜஸ்டோ ஜோஸ் என்றும் 45 வயதான அவர் சற்று மனநிலை சரியில்லாமல் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வரும் போலீஸார் மிருகக்காட்சி சாலையின் காவலாளியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டனர்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1z1u4w9″ standard=”http://www.youtube.com/v/mIasPq6kJXI?fs=1″ vars=”ytid=mIasPq6kJXI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep1436″ /]