சிறையில் உள்ள ஜெயலலிதாவை சந்திக்க முன்னாள் பிரதமர் விருப்பம்.

jail for jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை சந்திக்க தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள் பெங்களூர் நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவை சந்தித்து பேச,  விருப்பம் தெரிவித்து பெங்களூர் போலீஸ் கமிஷனரிடம் கூறியதாகவும், அவரை அனுமதிப்பது குறித்து போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் ஜெயலலிதா, யாரையும் சந்திக்க விரும்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளதாக பெங்களூர் சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒருவேளை அவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்திக்க விரும்பினல் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தயாராக இருப்பதாக தேவேகவுடாவிடம் போலீஸ் கமிஷனர் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், தேவேகவுடாவின் விருப்பம் குறித்து ஜெயலலிதாவிடம் தெரிவிப்பதற்காக சிறைக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குபேந்திரரெட்டி எம்.பி. நேற்று சென்றுள்ளார். ஆனால், ஜெயலலிதாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்காமல் அவர் திரும்பி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply