தமிழக வம்சாவளி முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்
தமிழக வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஆர்.நாதன் கடத 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூர் பிரதமராக அந்நாட்டு மக்களுக்காக பணிபுரிந்தவர். இவர் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கி வரும் பர்வாசி பாரதிய சன்மான் என்றா விருது இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு வழங்கப்பட்டது. சிங்கப்பூர் பிரதமர் ஆவதற்கு முன்பு இவர் மலேசியாவுக்கான உயர் கமிஷனர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்தமுன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவால், இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி பாதியில் பறக்கவிடப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.