திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் வரவேற்பு

திருப்பதி வரும் ராஜபக்சேவுக்கு ஆந்திரமுதல்வர் வரவேற்பு

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய வருகை தருகிறார். அவருக்கு ஆந்திரமுதல்வர் சந்திரபாபுநாயுடு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு நன்றி கூறவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகவும் ஏழுமலையானிடம் வேண்டுதல் செய்ய ராஜபக்சே திருப்பதி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

இறுதிப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளிக்க கூடாது என தமிழர்கள் ஆந்திர முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply