மது அருந்துவதை நிறுத்துங்கள். ராஜபக்சேவுக்கு குடும்ப டாக்டர் எச்சரிக்கை

மது அருந்துவதை நிறுத்துங்கள். ராஜபக்சேவுக்கு குடும்ப டாக்டர் எச்சரிக்கை

rajapakseஇலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்து பதவியை இழந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே, அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மருத்துவர் தெரிவித்துள்ளார். ராஜபக்சேவின் கல்லீரல் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ராஜபக்சேவின் குடிப்பழக்கமே இதற்கு காரணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ராஜபக்சே அதிபராக இருக்கும்போதே அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், பதவியை இழந்தபின்னர் அவர் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில் அதிகமாக மது குடித்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்ப டாக்டர் தெரிவித்துள்ளார். ராஜபக்சே மதுபானம் அருந்துவதை குறைத்து கொள்ளவேண்டும் என்றும், இல்லை என்றால் கல்லீரலுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சிங்கள இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான புதிய அரசு ராஜபக்சே மீதும் அவரது மனைவி, மகன் மீதும் பல்வேறு வழக்குகள் போட்டுள்ளதால் அந்த மன அழுத்தத்தில் ராஜபக்சே குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

Leave a Reply