தயாநிதி மாறனிடம் 8 மணி நேரம் தொடர் விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள்.

dayanidhi maranமுன்னா மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன்னுடைய சகோதரரின் சன் நெட்வொர்க் நிறுவனத்திற்காக பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில்,நேற்று அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 8 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

மத்திய மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவியில் இருந்த போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பூமிக்கடியில் தனது சகோதரரின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு தயாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். முன்னாள் பொது மேலாளர் பிரம்மநாதன் மற்றும் தயாநிதி மாறனின் சகோதரர் தொலைக்காட்சி நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் மீது டெல்லி சி.பி.ஐ. போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு குறித்து ஏற்கனவே தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் கவுதமன், அவரது சகோதரர் டி.வி.யின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கடந்த ஜனவரி மாதம் கைது செய் நிலையில்,  தயாநிதி மாறனை நேற்று நேரில் ஆஜராகுமாறு சி.பி.ஐ. உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற தயாநிதி மாறன் நேற்று காலை 11 மணிக்கு டெல்லியிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், சி.பி.ஐ. அதிகாரிகளின் குழு விசாரணையை மேற்கொண்டனர்.

சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது, தயாநிதிமாறனின் 65 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியவில்லை எனவும், ஞாபகம் இல்லை என்றும் தயாநிதிமாறன் பதில் கூறியதாகவும் சிபிஐ வட்டாரங்களை  தெரிவிக்கின்றன.

Leave a Reply