பிரபல பார்முலா ஒன் கார்பந்தய வீரர் மைக்கேல் ஷுமேக்கர் கடந்த 170 நாட்களாக கோமா நிலையில் இருந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று அவருக்கு நினைவு திரும்பியதாகவும், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் அவருடைய மேலாளர் பேட்டியளித்துள்ளார்.
7 முறை சாம்பியன் பட்டம் வென்ற பார்முலா ஒன் கார்பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர், கடந்த டிசம்பர் மாதம் பிரான்ஸில் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்து காரணமாக படுகாயம் அடைந்து,கிரெனோபில் பல்கலைக்கழக மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/SPhj71″ standard=”http://www.youtube.com/v/lmy6iXpEF7E?fs=1″ vars=”ytid=lmy6iXpEF7E&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep7083″ /]
கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேல் கோமா நிலையில் இருந்த அவர், எப்பொழுது நினைவு திரும்புவார் என்று உறுதியாக மருத்துவர்களால் சொல்ல முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு நினைவு திரும்பியதாகவும், அவர் தன் மனைவியை அடையாளம் கண்டுகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மைக்கேல் ஷூமேக்கர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவருடைய மேலாளர் தெரிவித்துள்ளார். அவர் தற்போது எங்கு இருக்கின்றார் என்பதை கூற மறுத்துவிட்டார்.
மைக்கேல் ஷூமேக்கர் விரைவில் பூரண குணமடைவார் என்றும், அதன்பின்னர் அவர் ரசிகர்களின் மத்தியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.