ஒன்பது மாத இடைவெளியில் நான்கு குழந்தைகள். இங்கிலாந்து தம்பதிகளின் சாதனை.

four babies 1     இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒன்பது மாத இடைவெளியில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. முதல் பிரசவத்தில் மூன்று குழந்தைகளும், இரண்டாவது பிரசவத்தில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

four babies 4
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சாரா வார்டு என்ற 29 வயது பெண்ணுக்கு கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவமாக பிறந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமுற்றார். அவருக்கு மேலும் ஒரு குழந்தை கடந்த வாரம் பிறந்துள்ளது. ஒன்பது மாத இடைவெளியில் நான்கு குழந்தைகளூக்கு பெற்றோர்களான சாரா மற்றும் அவரது கணவர் பென் ஸ்மித், குழந்தைகளை வளர்ப்பதிலேயே தங்களது முழு நேரத்தையும் செலவழித்து வருகின்றனர்.
four babies 5
நான்கு குழந்தைகளுக்கும் சேர்த்து வாரம் ஒன்றுக்கு 80 பாட்டில்கள் பால் மற்றும் 175 பாக்கெட்டுக்கள் நாப்கின்களும் தேவைப்படுவதாக கூறும் சாரா, தனது கணவர் சம்பாதிக்கும் பணத்தில் 75% குழந்தைகளின் செலவுக்கே சரியாக இருப்பதாக கூறியுள்ளார். இருப்பினும் நான்கு குழந்தைகளும் எங்களுக்கு விலைமதிப்பில்லாத செல்வங்கள் என்றும், அவர்களை நல்லபடியாக வளர்க்க எவ்வித தியாகத்தையும் நாங்கள் செய்ய தயார் என்றும் சாரா-ஸ்மித் தம்பதியினர் கூறியுள்ளனர்

four babies 2four babies

Leave a Reply