உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்திய பெண்களுக்கு இடம்.

womenஉலக அளவில் புகழ்பெற்றுள்ள மிகப்பெரிய பத்திரிகையான போர்ப்ஸ் பத்திரிக்கை சமீபத்தில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் ஒன்றை எடுத்து அதன் முடிவை நேற்று அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை எடுத்து வருகிறது என்பது அனைவரும் தெரிந்ததே. கடந்த 11ஆண்டுகளாக இந்த பட்டியலை எடுத்து வரும் போபர்ஸ், இந்த ஆண்டு தனது 12வது பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்  முதல் இடத்தில் ஜெர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெல் உள்ளார். இரண்டாவது இடத்தில் அடுத்த அமெரிக்க அதிபராக வருவார் என எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டனும், மூன்றாவது இடத்தில் மெலிண்டா கேட்சும் உள்ளனர்.

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த எஸ்.பி.ஐ. தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா(30), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் சந்தா கோச்சார்(35), பயோகான் நிறுவனர் கிரண் மாஷுந்தார் ஷா(80) மற்றும் எச்.டி. மீடியா தலைவர் ஷோபனா(93) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த பெப்சிகோ தலைமை அதிகாரி இந்திரா நூயி மற்றும் சிஸ்கோ தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்மஸ்ரீ வாரியர் ஆகிய இரண்டு பெண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply