சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரத் திட்டமிட்ட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள சிரியாவின் துணை பிரதமர் வலித் அல் மவுலம், ஜோர்டானிலிருந்து சிரியாவுக்குள் நுழைந்து ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்ட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிரிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் குறித்த விவரங்களையும் இந்திய அதிகாரிகளிடம் அவர் கேட்டுள்ளார்.