அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த 4 மாநில முதல்வர்கள்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யாத நான்கு மாநில முதல்வர்கள் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து அவருடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாநில அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்திப்பதற்கு அவருடைய மாளிகைக்கு சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்க கவர்னர் மறுத்துவிட்டதால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவருடைய அமைச்சர்கள் மூன்று பேர் அவருடைய மாளிகையிலேயே தொடர்ந்து ஆறு நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க அல்லாத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாவு நாயுடு ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளனர். இந்த சந்திப்பு மூன்றாம் அணிக்கு அஸ்திவாரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது