கடந்த 2006ஆம் ஆண்டு மொபைல் பொன்களுக்கு தேவையான உபரி பாகங்கள் தயாரித்து கொடுக்கும் நிறுவனமாக ‘பாக்ஸ்பான் என்ற கம்பெனி ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆரம்பிக்கப்பட்டது. நோக்கியா நிறுவனத்திற்கு தேவையான பல உபரி பாகங்கள் இந்த நிறுவனத்தில் இருந்துதான் சப்ளை செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனமும் மூடப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் இந்த நிறுவனத்தை மூட இருப்பதாக வியட்நாமில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
ரு.850 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாக்ஸ்கான் நிறுவனம் உற்பத்தி குறைவு என்ற காரணத்தை கூறி மூட இருப்பதாக அறிவித்துள்ளது. நோக்கியா தவிர சாம்சங், ஆப்பிள் மற்றும் சோனி ஆகிய மொபைல் போன் நிறுவனங்களுக்கு பாக்ஸ்கான் நிறுவனம் உபரி பாகங்களை சப்ளை செய்தாலும், நோக்கியாவுக்கு மட்டுமே அதிகளவில் சப்ளை செய்தது. நோக்கியோ மூடப்பட்ட காரணத்தால் தற்போது பாக்ஸ்கானும் மூடப்படுகிறது.
இந்நிறுவனம் மூடப்படுவது குறித்து பாக்ஸ்கான்’ இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் ரஜினி அவர்கள் கூறும்போது, “நோக்கியா மூடப்பட்டதால், ‘பாக்ஸ்கான்’ ஆலையை மூடும் அளவுக்கு, உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஆனால், நோக்கியாவை காரணம் காட்டி, இந்த ஆலை மூடப்படுகிறது. இரு வாரங்களுக்கு முன், ‘டிசம்பர் இறுதியில் ஆலை மூடப்படும்’ என, நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், தொழிலாளர்களுக்கான வாய்ப்பு குறித்து இதுவரை விவாதிக்கப்படவில்லை. நோக்கியா ஆலை உற்பத்தியை குறைத்த பின்பும், கடந்த, ஐந்து மாதங்களில், தொடர் உற்பத்தி நடந்தது. அடுத்த நான்கு மாதங்களுக்குத் தேவையான ஆர்டர்களுக்கு, உற்பத்தி செய்து, இருப்பு வைத்துள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, ஆலை தொடர்ந்து நடக்க வேண்டும். ஒரு தொழிலாளி கூட, வேலை இழக்கக் கூடாது. இதற்கு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.