பாலியல் தொழில் தடை சட்டத்தை எதிர்த்து பிரான்ஸ் பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்.
பிரான்ஸ் நாட்டில் பழமையான தொழிலாக கருதப்பட்ட பாலியல் தொழிலை முற்றிலும் ஒழிக்க விபச்சார தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த அபராதம் தொடர் எச்சரிக்கைக்கு பின்னரே விதிக்கப்படும் என்று அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து பாலியல் தொழிலாளர்கள் நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிரான்ஸ் நாட்டில் பாலியல் தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டினர்கள் என்றும் குறிப்பாக கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, சீனா, லத்தீன் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என்றும், இந்த சட்டத்திற்கு பிரான்ஸ் மக்கள் அமோக வரவேற்பு அளித்துள்ளனர் என்றும் அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.