உலகில் முதல்முறையாக சோலார் பேனல் மூலம் சாலை. பிரான்ஸ் சாதனை
[carousel ids=”99160,99161,99162,99163″]
இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் சோலார் பேனலால் சாலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே சோலார் பேனல் மூலம் சாலை அமைத்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெறுகிறது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள Tourouvre-au-Perche என்ற பகுதியில் சோலார் பேனல் மூலம் 1 கிமீ அளவில் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையின் மூலம் வருடம் ஒன்றுக்கு 280 MWh மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுகிறது.
2880 சோலார் பேனல்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து அருகில் உள்ள கிராமம் ஒன்றின் அனைத்து தெருவிளக்குகளையும் பயன்படுத்தலாம். இந்த சோலார் சாலை படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று பிரான்ஸ் மின்சார துறை தெரிவித்துள்ளது.