ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்: அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை இணைக்க பிரான்ஸ் திட்டம்

ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்: அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை இணைக்க பிரான்ஸ் திட்டம்
france
சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பிரான்ஸ் எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கவேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதை அடுத்து. இந்த தாக்குதலில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் கூட்டு சேர்க்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.

எனவே இருநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும்,  முதற்கட்டமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை இன்று வெள்ளை மாளிகையில் பிரெஞ்சு அதிபர் ஹாலண்டே சந்தித்து பேச உள்ளதாகவும், இதனை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினையும் அவர் விரைவில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply