கேரள ஆளுனராக பி.சதாசிவத்தை நியமித்தால் வழக்கு தொடருவோம். வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு.

sadasivamசுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்களை கேரள ஆளுனராக நியமனம் செய்ய அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் அவர்களை, கடந்த மாதம் 26ஆம் தேதி கேரள மாநில ஆளுனராக நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வழக்கறிஞர்களின் அகில இந்திய பார் அசோசியேஷன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா அவர்கள் செய்தியாளர்களிடம் இன்று காலை கூறியபோது ”தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற சில மாதங்களிலேயே சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட இருப்பது நீதித்துறை சுதந்திரத்தில் ஒரு தழும்பை ஏற்படுத்தும். சதாசிவத்தை கவர்னராக நியமிப்பதற்கு பதிலாக, லோக்பால் அமைப்பில் நியமிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.

ஏனென்றால் அதன் செயல்பாடு நீதித்துறைக்கு இணையானது. மேலும், முன்னாள் தலைமை நீதிபதியின் அந்தஸ்துக்கு பொருத்தமானது. ஒரு நடுநிலையான அரசு தன் விருப்பத்துக்காக இதுபோன்ற நியமனங்களை செய்யக் கூடாது. ஒருவேளை சதாசிவம் கவர்னராக நியமிக்கப்பட்டால் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” என்றார்.

Leave a Reply