ரூ.39 லட்சத்தை முதியவர் ஒருவரிடம் இருந்து திருடிவிட்டு போலீஸிடம் இருந்து தப்பிக்க இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருப்பது போல் நடித்த இங்கிலாந்து நாட்டு நபர் ஒருவர் நேற்று லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஆலன் நைட். என்ற நபர் தன்னுடைய வீட்டின் அருகில் இருந்த முதியவர் ஒருவருக்கு உதவி செய்வது போல நடித்து அவர் வைத்திருந்த ரூ.39 லட்சத்தை திருடிவிட்டார். இது தொடர்பான வழக்கு ஒன்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தனக்கு சாதகமாக இல்லாததை தெரிந்து கொண்ட ஆலன் நைட், போலீஸாரையும் நீதிமன்றத்தையும் ஏமாற்ற தனக்கு கோமா வந்ததை போல கடந்த இரண்டு வருடங்களாக நடித்தார்.
இருப்பினும் இவருடைய நடவடிக்கையை கண்காணித்து வந்த போலீஸார், நேற்று முன் தினம் படுக்கையில் இருந்து எழுந்து வெளியே சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் வந்து கோமா வந்தவரை போல நடித்துள்ளனர். இதை தொடர்ந்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு நவம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.