சென்னைப் பல்கலைக்கழகம் செயல்படுத்திவரும் இலவச கல்வித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுவதற்கு, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சென்னைப் பல்கலை இணைப்புக் கல்லூரிகளில்(அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி) இத்திட்டத்தின் கீழ், இளநிலைப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். மேற்கண்ட 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
ஆதரவற்ற மாணவர்கள், விவசாய கூலிகளின் பிள்ளைகள், முதல் தலைமுறையாக பட்டப் படிப்பில் சேருபவர்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விருப்பமுள்ளோர், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களுக்குள், விண்ணப்பத்தை, பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.unom.ac.in