இனி இணையத்தின் உதவியால் இலவச வில்லங்க சான்று. ஜெயலலிதாவின் புதிய திட்டம்.

8இணையத்தின் உதவியால் இனிமேல் இலவசமாக வில்லங்க சான்றிதழை பார்க்கும் வசதி கொண்ட இணையதள வசதியை இன்று முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இந்த வசதி ரூ.58 லட்சம் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை வில்லங்க சான்றிதழ் பெற வேண்டுமென்றால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று பணம் கட்டி விண்ணப்பித்துவிட்டு அதன் பின்னர் மறுநாள்தான் வில்லங்க சான்றிதழை பெறமுடியும். இதனால் பொதுமக்களுக்கு அலைச்சலும் பணச்செலவும் அதிகமாகியது. எனவே பத்திரப்பதிவு அலுவலகம் முழுவதையும் கணிணிமயமாக்கிய தமிழக அரசு, இணையத்திலேயே வில்லங்க சான்றிதழையும் பார்க்கும் வசதியை தொடங்கியுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் வீரபாண்டி, ஓமலூர் ,ஜலகண்டாபுரம்; கணியூர், உடுமலைப்பேட்டை; கோவில்பட்டி, கொம்மடிக்கோட்டை;சேத்தூர், திருத்தங்கல், தாத்தையங்கார்பேட்டை; வேப்பந்தட்டை;திருப்பூண்டி; நங்கவரம்; வேலூர், குமாரபாளையம்; வெம்பாக்கம்; வள்ளியூர்; வடக்கனந்தல், ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கான புதிய கட்டிடங்களையும் முதல்வர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டிடங்களின் மதிப்பு 9 கோடியே 20 லட்சம் ரூபாய் ஆகும்.

Leave a Reply