சென்னை காவல்துறை மற்றும் எல்.ஐ.சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த வாரம் முழுவதும் சாலை பாதுகாப்பு வாரத்தை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டி வருபவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்க சென்னை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவ மாணவர்களுடன் இணைந்து நடத்தும் ஊர்வலம், மெரினா கடற்கரை மணலில் சாலை பாதுகாப்பு குறித்து மணற்சிற்பம் அமைப்பது போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்த சென்னை டிராபிக் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் இன்று ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்களை பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவதோடு இலவசமாக ஹெல்மெட்டும் கொடுத்து வருகின்றானர். இன்று மட்டும் சென்னை நகரம் முழுவதும் சுமார் 2000 ஹெல்மெட்டுக்கள் வழங்க டிராபிக் போலீஸார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.