அரசு சார்பில் இலவச IAS பயிற்சி வகுப்பு.! மாதம் ரூ.3,000 உதவித்தொகை.. நாளை முதல் தொடக்கம்

இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்,தமிழக இளைஞர்களுக்குக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது.

இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன.

முதன்மைத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது.

அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இன்று சேர்க்கை நடைபெறுவதோடு 01.07.2022 முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்