4 வயதில் 60 வயது தோற்றம். பங்களாதேஷ் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

4 வயதில் 60 வயது தோற்றம். பங்களாதேஷ் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

bangladeshஅரிய நோய் ஒன்றினால் 4வயது சிறுவன் ஒருவன் 60 வயது முதியவரை போல காட்சி அளிக்கின்றார். இந்த சிறுவனின் குறையை தீர்க்க மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த லாப்லு லட்கர் – காத்தூன் தம்பதியரின் ஒரே மகன் பைசித் ஷிக்தர், பிறக்கும் போதே அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு ஒருதோல் பொட்டலம் போல காட்சியளித்தார். ஆனால் குழந்தை வளர்ச்சி அடைய அடைய சரியாகிவிடும் என்று நினைத்த பெற்றோர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுவனின் தோல் மட்டுமே அதிக வளர்ச்சி அடைந்து தற்போது 4 வயதில் 60 வயது தோற்றத்தை பெற்றுள்ளான்

நெருங்கிய உறவுமுறையில் திருமணம் செய்வதால் வரும் இந்த அரிய நோய் ‘புரோகேரியா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த அரியநோய்க்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்யவும், பைசித் ஷிக்தருக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்கவும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை தற்போது முன்வந்துள்ளது. மேலும் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் நிதியுதவி செய்யவும் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply