பிரான்ஸ் நாட்டில் கடந்த 1994ஆம் ஆண்டு ஷோபி செர்ரானோ என்ற பெண்ணுக்கு பிறந்த பெண்குழந்தை அவருக்கு பிறந்த உண்மையான குழந்தை அல்ல என்றும், அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை நர்ஸ் குழந்தையை மாற்றி கொடுத்துவிட்டதாகவும் தற்போது தெரிய வந்துள்ளதால், அந்த மருத்துவமனை மீது ரூ.90 கோடி கேட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
1994ஆம் ஆண்டு ஷோபிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்ததால் அந்த குழந்தையை இன்குபேட்டரில் நர்ஸ் வைத்திருந்தார். அதே இன்குபேட்டரில் ஏற்கனவே இன்னொரு பெண் குழந்தையும் இருந்தது. அதன்பின்னர் இன்குபேட்டரில் குழந்தையை வெளியே எடுத்த நர்ஸ், குழந்தையை மாற்றிக்கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் ஷோபிக்கு பத்து வருடங்கள் கழித்து தெரியவந்தது. எனவே குழந்தை உண்மையிலேயே தங்கள் குழந்தையா என்பது குறித்து தெரிந்து கொள்ள ஷோபி டி.என்.ஏ டெஸ்ட் செய்தார். அதில் அவரிடம் வளர்ந்து வரும் குழந்தை அவருடைய உண்மையான குழந்தை இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர் குழந்தை மாறிய பெற்றோரை பல வருடங்களுக்கு பின்னர் கண்டுபிடித்த ஷோபி, தற்போது தனது உண்மையான குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார். தற்போது ஷோபியின் மகள் வயது 20. இந்த இருபது வருடங்கள் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.90 கோடி தரவேண்டும் என ஷோபி வழக்கு தொடர்ந்துள்ளர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.