கடந்த 19 நாட்களாக உலக நாடுகளின் மீட்புப்படைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேடிக்கொண்டிருந்த MH370 என்ற மலேசிய விமானம் கடைசியாக ஒருவழியாக இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் 122 துண்டுகளாக கிடைத்துள்ளது.
இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் மலேசிய விமானத்தின் 122 உடைந்த துண்டுகள் மிதந்து கொண்டிருப்பதாக பிரான்ஸ் நாட்டு செயற்கைகோள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் பிரான்ஸ் நாடு மலேசிய அரசுக்கு நேற்று அனுப்பியுள்ளது. இதன் மூலம் விமானம் கடலில் விழுந்ததை உறுதி செய்துள்ள மலேசிய அரசு மிதக்கும் துண்டுகளை மீட்பது குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருகிறது.
இந்த உடைந்த துண்டுகள் 400 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து கிடப்பதாகவும், இதில் ஏதாவது ஒரு துண்டு விமானத்தின் கருப்புப்பெட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.