இன்னும் சிலருக்கு உண்ணும் உணவு ஓர் காரணமாக இருக்கும். ஆம், சில உணவுகளும் சிறுநீர் கழிக்கத் தூண்டும். காபியில் உள்ள காப்ஃபைன் அடிக்க சிறுநீர் கழிக்கத் தூண்டும். ஏனெனில் இது ஆன்டி-டையூரிக் ஹார்மோன் மீது ஆதிக்கம் செலுத்தி, சிறுநீரைக் கழிக்கத் தூண்டும். காப்ஃபைன் போன்றே ஆல்கஹாலும் ஆன்டி-டையூரிக் ஹார்மோன் மீது தாக்கத்தை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். குறிப்பாக பீர், ஒயின் போன்றவை தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும்.
சிட்ரஸ் பழங்களால் ஆன ஜூஸ்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். சோடா பானங்கள் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தி, அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும். எனவே எப்போதும் சோடா பானங்களை வெளியிடங்களுக்குச் செல்லும் போது குடிக்காதீர்கள். எப்போது ஒருவரின் உடலில் உப்புச்சத்து குறைய ஆம்பிக்கிறதோ, அப்போது அவர்களுக்கு சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படும். அதனால் தான் உடற்பயிற்சி செய்யும் போது, வியர்வையின் வழியே உப்பு வெளியேறி, சிறுநீர் வருவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.