ஜூலை 12-ல் ஏழுமலையான் கோவில் 6 மணி நேரம் மூடல்
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவியும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதேசி, ஆனி வார ஆஸ்தானம், யுகாதி பண்டிகை, வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய உற்சவங்களுக்கு முன்னர் ஏழுமலையான் கோவிலின் கருவறை முதல் கோவிலின் முன்வாசல் வரை சுத்தம் செய்யப்படும்.
அந்த வகையில் வரும் 16ஆம் தேதி ஆனி வார ஆஸ்தானம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்வரும் செவ்வாய்க்கிழமை அதாவது ஜூலை 12ஆம் தேதி ஏழுமலையான் கோவில் சுத்தம் செய்யப்படவுள்ளது.
எனவே அன்றைய தினத்தில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளதாகவும், இந்த நாளில் மதியம் 12 மணிக்கு மேல் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.