திருத்தப்பட்ட புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டையை இன்றுமுதல் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் இன்று காலை அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக புதிய வாக்காளர் சேர்ப்பு பணி நடந்து முடிந்தது. தமிழகத்தின் புதிய வாக்காளர்கள் இன்று முதல் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
மேலும் தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தால் ஒராண்டு சிறைதண்டனை வழங்கப்படும் நாட்டின் எதிர்கால நன்மையை கருதி தகுதியான வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பணத்திற்கு அடிமையாகாமல் தங்கள் வாக்குரிமையை விற்க எந்த வாக்காளரும் முன்வரக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இயக்கப்படும் அனைத்து இயந்திரங்களிலும் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்கிற நோட்டா பட்டன் இடம்பெறும் என்றும், இந்த பாராளுமன்ற தேர்தலோடு பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமாவால் காலியான ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் என பிரவீண்குமார் தெரிவித்தார்.