தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் மறைந்த வெங்கடேச பண்ணையார் அவர்களின் நினைவு தினம் நாளை (26 ஆம் தேதி) அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நடப்பதை தவிர்ப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் வரும் 27 ஆம் தேதி காலை வரை 144 .தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் இன்று காலை பிறப்பித்துள்ளார்.