இன்று முதல் அனைத்து விசாக்களும் ரத்து: அதிரடி முடிவால் பரபரப்பு

இன்று முதல் அனைத்து விசாக்களும் ரத்து: அதிரடி முடிவால் பரபரப்பு

இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து விசாக்களும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டிருக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

ஏப்ரல் 15ம் தேதி வரை அனைத்து நாடுகளின் பயணிகளுக்கும் வழங்கப்பட்டிருந்த விசாக்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐநா.சபை அதிகாரிகள், சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு திட்ட விசாக்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சீனா, இத்தாலி, ஈரான்,கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சென்று. பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் நாடு திரும்பியவர்கள் 14 நாள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply