உலகக்கோப்பை கால்பந்து போட்டி. இன்று முதல் நாக் அவுட் சுற்றுகள் ஆரம்பம்.

knockout matchபிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்து‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16 அணிகள் தகுதி பெற்றன.

இன்று முதல் நாக்அவுட் ஆட்டங்கள் தொடங்குகிறது. இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் முதல் நாக் அவுட் ஆட்டத்தில் பிரேசில்– சிலி அணிகள் மோதுகின்றன.

பிரேசில் அணி ‘லீக்’ ஆட்டத்தில் குரோஷியா, கேமரூனை வீழ்த்தி மெக்சிகோவுடன் ‘டிரா’ செய்தது. சிலி அணியும் லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடி நடப்பு சாம்பியன் ஸ்பெயினை வீழ்த்தி இருந்தது.

பிரேசில் அணி நட்சத்திர வீரர் நெய்மரை மட்டுமே அதிகம் நம்பி உள்ளது. உள்ளூரில் போட்டி நடப்பது இந்த அணிக்கு மனரீதியில் நல்ல நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஏற்கனவே இரண்டு முறை உலகக்கோப்பை போட்டிகளில் பிரேசில் அணியிடம் தோல்வி அடைந்ததற்கு பழிவாங்கும் வெறியில் சிலி அணி இருக்கிறது. அந்த அணி எளிதில் தோல்வியடையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

Leave a Reply