நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பம் செய்வது எப்படி?

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பம் செய்வது எப்படி?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இன்று முதல் வரும் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

எம்.பி.பி.எஸ், பிஎடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 6ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு மார்ச் 9ந் தேதி வரை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நீட் தேர்வில் பங்கேற்பதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த மார்ச் 10ந்தேதி கடைசி நாளாகும்.

தேர்வுக் கட்டணம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 750 ரூபாய் என்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொதுப் பிரிவினருக்கு 1400 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் www.cbseneet.nic.in என்கிற இணையத்தள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply