மீண்டும் இயங்கியது ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் மலை ரயில் மீண்டும் தொடங்கியது

இன்று காலை 150 சுற்றுலா பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது என தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ரயில் மீண்டும் இயக்கப்பட்டதை அடுத்து பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது