நாளை முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நாளை ஒருநாள் 3.5 லட்சம் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நாளை ஜனவரி 8, நாளை மறுநாள் இரண்டாவது சனிக்கிழமையான ஜனவரி 9 மற்றும், ஜனவரி 10 ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் வங்கிகள் தொடர்ந்து செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் புதிய ஊதிய உயர்வு, பணிச் சலுகை ஆகியவை குறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் 5 துணை வங்கிகளின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகளை கைவிடக் கோரி நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் அனைத்து வங்கிகளுக்கும் புதிய ஊதிய உயர்வு, பணிச்சலுகை தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஷரத்துகளை மீறி பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான, “ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்’, “ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்’, “ஸ்டேட் பாங்க் ஆப் பிகானிர்’, “ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்’, “ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா’ ஆகிய 5 வங்கிகளின் நிர்வாகங்கள் புதிய பணி முறைகளை வாபஸ் பெறக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது
Chennai Today News: From tomorrow banks leave for three days
இவ்வாறு வெங்கடாசலம் தெரிவித்தார்.