இந்தியாவின் மினி புல்லட் ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்

இந்தியாவின் மினி புல்லட் ரயில் சேவை நாளை முதல் தொடக்கம்
train
மினி புல்லட் ரயில் என்று சொல்லக்கூடிய வகையில் இந்தியாவின் முதல் அதிவேக கதிமன் ரயில்சேவை நாளை டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களுக்கு இடையே தனது சேவையை தொடங்குகிறது. இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிஜாமுதீன் – ஆக்ரா கதிமன் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இந்த ரயில் சேவையை நாளை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கின்றார். இந்த அதிவேக ரயில் டெல்லி-ஆக்ரா இடையேயான 200 கி.மீ. தூரத்தை வெறும் 100 நிமிடங்களில் அடையும் என்று கூறப்படுகிறது.

விமானத்துக்கு இணையான சேவையாக இந்த ரயில்சேவை கருதப்படுகிறது. மேலும் விமானங்களில் பணிப்பெண்கள் இருப்பது போன்று, இந்த ரயிலில் பணிப்பெண்கள் இருப்பார்கள். ரோஜாப்பூவுடன் வரவேற்கும் பெண்கள், பயணிகள் தங்களின் இருக்கைக்கு சென்று அமர உதவுவார்கள்

தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில், இந்த ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை விட, கதிமன் ரயில் கட்டணம் 25 சதவீதம் அதிகம்.ஆனால் அதே நேரத்தில் உணவும் சேவையும் மிகச் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

முழுகோதுமை உப்புமா, மினி தோசை, காஞ்சிபுரம் இட்லி, பழத் துண்டுகள், சிக்கன் ரோல், ஸ்பானிஸ் முட்டை, ஆம்லெட், கேக்குகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் ‘போன் சைனா’ பாத்திரங்களில் வழங்கப்படும்.

Leave a Reply