எல்பிஜி லாரி ஸ்டிரைக்: சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வருமா?
நாளை அதாவது பிப்ரவரி 12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் சிலிண்டர் தட்டுப்பாடு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த டேங்கர் லாரிகளை அந்தந்த மாநிலங்களில் தான் இயக்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் பழைய முறைப்படி அகில இந்திய அளவில் டெண்டர் விடவேண்டும் என்பதை வலியுறுத்தி சமீபத்தில் நாமக்கலில் நடைபெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 4,500 டேங்கர் லாரிகள் பங்கேற்கும் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர். இதன்படி நாளை முதல் லாரி உரிமையாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்.