நாளை 14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக நாளை 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் நவம்பர் 11ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
நாளை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்