வழிகாட்டி முறைகள் வெளியீடு
ஜூன் 8ஆம் தேதி முதல் உணவகங்கள் வழிபாட்டுத்தலங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் நாளை முதல் உணவகங்கள் திறக்கப்படும் என்றும், அதற்கான வழிகாட்டு செயல்பாடுகளை தமிழக அரசு சற்றுமுன் வெளிவந்துள்ளது
இதன்படி ஹோட்டல் வாசலில் தெர்மல் ஸ்கிரீன் கருவி வைத்தல் வேண்டும், கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி சோப்பு இருக்க வேண்டும், ஒரு டேபிளும் மற்றவர்களுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் போன்ற வழிகாட்டு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், கொரோனா அறிகுறி மற்றும் பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த வழிபாட்டு முறையில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது