நாளை முதல் கோச்சடையான். சென்னையில் மட்டும் தினமும் 300 காட்சிகள்.

deepika-Kochadaiyaanரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் நாளை முதல் உலகம் முழுவது ரிலீஸ் ஆகிறது. இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை கோச்சடையான் படைக்க இருக்கிறது. இந்தியாவில் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் ரிலீஸாக இருக்கிறது.

சென்னையில் உள்ள அனைத்து மல்டி பிளக்ஸ் திரையரங்குகளிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் உள்ள முக்கியமான மல்ட்டிபிளக்ஸ்களான சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் மாயாஜால் காம்ப்ளக்ஸில் உள்ள 16 தியேட்டர்களிலும் கோச்சடையான் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. நாள் ஒன்றுக்கு 100 காட்சிகள் இந்த வளாகத்தில் திரையிட உள்ளது. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 300 காட்சிகள் திரையிட உள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் திரையிடப்படும் அனைத்து தியேட்டர்களுக்கு நேற்றே பிரிண்ட் காப்பிகள் சென்றடைந்துவிட்டன. தமிழகத்திலும் பிறமாநிலங்களிலும் உள்ள தியேட்டர்களுக்கு இன்று மாலைக்குள் பிரிண்ட் அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Leave a Reply