நாளை முதல் புதிய ரூ.200 நோட்டு: சில்லறை தட்டுப்பாடு நீங்குமா?

நாளை முதல் புதிய ரூ.200 நோட்டு: சில்லறை தட்டுப்பாடு நீங்குமா?

இந்திய ரிசர்வ வங்கி சமீபத்தில் ரூ.2000 நோட்டு அறிமுகம் செய்ததால் சில்லறை தட்டுப்பாடு அதிகமாகியது. ரூ.100 அல்லது ரூ.200க்கு பொருள் வாங்கிவிட்டு ரூ.2000 நோட்டை கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சில்லரை கொடுப்பது வணிகர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது

இந்த நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் நாளை முதல் ரூ.200 நோட்டு அறிமுகமாகிறது. பிரகாசமான மஞ்சள் நிறத்தில் உள்ள இந்த புதிய 200 ரூபாய் நோட்டு மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் சாஞ்சி ஸ்தூபியும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சாமானியர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு,புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply