நாளை முதல் திருமலை மற்றும் திருப்பதி பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களில், நாட்டில் முதல் முதல்முறையாக, ஆன்லைன் வங்கி சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக அஞ்சலத்துறை தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சீமாந்திரா பகுதியில், முதல் முறையாக, திருமலை ,திருப்பதி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும், ஆன்லைன் கோர் பேங்க்கிங் சேவைகள் தொடங்கப்படவுள்ளன. தொடக்க விழாவிற்கு தில்லி, கர்ணூல், ஐதராபாத் போன்ற நகரில் இருந்து அஞ்சலக உயர் அதிகாரிகள் வருகைதர உள்ளனர்.
இந்த புதிய சேவை ஆரம்பமாக உள்ளதையடுத்து, திருப்பதி மற்றும் திருமலை அஞ்சலகங்களில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சேவைகள், இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சலகங்களில் ஆன்லைன் வங்கிச்சேவை ஜூன் 9-ஆம் தேதி முதல், முழு அளவில் செயல்படத்துவங்கும் என திருப்பதி அஞ்சலக அதிகாரி சர்மா தெரிவித்தார்.