நாளையுடன் முடிவடைகிறது சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனம்: பக்தர்கள் பரவசம்
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டது.
இதனை அடுத்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்தனர்
இந்த நிலையில் மண்டல பூஜை மகர பூஜை முடிவடைந்த நிலையில் நாளை அதாவது ஜனவரி 19ஆம் தேதி கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. எனவே இன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.