ஜூலை 10ஆம் தேதி வரை எரிபொருள் கட்டுப்பாடு
இலங்கையில் ஜூலை 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஜுலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது எனவும் அரசு அறிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.