முழுக்க முழுக்க முன்பதிவு செய்யப்படாத ரயில்களை அதிகம் விட ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாகவும், இந்த அறிவிப்பு வரும் ரயில்வே பட்ஜெட்டில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் முன்பதிவு செய்யாமல் ரயில் பயணம் செய்வோர் ஓரிரண்டு பெட்டிகளில் ஆட்டுமந்தைகளை போல பயணம் செய்து வருகின்றனர். ஆனால் இனிமேல் முன்பதிவு செய்யாதவர்களும் ஜாலியாக உட்கார்ந்து கொண்டு பயணம் செய்யும் வகையில் முழுக்க முழுக்க முன்பதிவு செய்யாத பெட்டிகள் கொண்ட ரயில்கள் அதிகம் விட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக முக்கிய வழித்தடங்களில் 100 ரயில்கள் வரை இயக்கவும், பின்னர் படிப்படியாக இந்த ரயில்கள் அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர இந்த ஆண்டு 100 க்கும் குறையாமல் புதிய ரயில்கள் விடப்படும் என்று தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் 160 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டது. எனவே இந்த பட்ஜெட்டிலும் 150 முதல் 180 வரை புதிய ரெயில்கள் விடுவது பற்றி ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.