எதிர்கால ஸ்மார்ட் கார்

smart_car_2417231f

எதிர்கால நகரங்களுக்கு ஏற்ப ஸ்மார்ட் கார்களை தயாரிக்க பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றன.

டிரைவர் இல்லாத கார், சோலார் கார், பறக்கும் கார் என பல முயற்சிகளும் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த பெர்மன் பல்கலைக்கழக ரோபோ துறையினர் ஒரு ஸ்மார்ட் காரை வடிவமைத்துள்ளனர்.

இரண்டு பேர் பயணிக்கும் விதமாக உள்ள இந்த காரின் சக்கரங்கள் 90 டிகிரிவரை சுழலும். இரண்டு கார்களுக்கு இடையில் உள்ள சிறிய இடத்திலும் இதன் மூலம் பார்க்கிங் செய்துவிட முடியும்.

மேலும் இந்த காரின் பின்புறம் இன்னொரு ஸ்மார்ட் காரை இணைக்க முடியும். இதே போல ஒவ்வொரு காருக்கு பின்புறமாக பல கார்களை இணைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் நேரத்தில் இடையில் ஒரு கார் மட்டும் கழற்றிக் கொள்ள முடியும். மீண்டும் பிற கார்கள் இணைந்து கொண்டு ஓடும்.

காரின் அனைத்து செயல்களும் சென்சார் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. காருக்குள் அனைத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம் என்பதால் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டுவிட்டு உட்கார்ந்தால் போதும்.

Leave a Reply